அதிமுகவில் இருந்து தவெகவுக்குச் சென்றவர்கள் மீண்டும் திரும்பத் தயாராக இருக்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.
கோவை மாவட்டம் சூலூரில் புதன்கிழமை மாலை நடைபெற்ற அதிமுகவின் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உரையாற்றினார்.
”கரூரில் 41 பேர் உயிரிழந்தார்கள், அவர்களைப் பார்க்காமல் சென்னை சென்றவர் திரும்பி வரவே இல்லை. என்னவாக இருந்தாலும் மருத்துவமனைக்குச் சென்று பார்த்திருக்க வேண்டும்.
தனிப்பட்ட முறையில் விஜய் என்னுடைய நண்பர். ஒரு படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காக எனது வீட்டுக்கு வந்தார். எனது காரில் அழைத்துச் சென்று எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நான்தான் உதவினேன். ஆனால் மக்களுக்கு தலைவன் எனச் சொல்லிக் கொண்டு வரும்போது அவர்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டும்.
அதிமுகவில் இருந்து தவெகவுக்குச் சென்றவர்கள் மீண்டும் அதிமுகவுக்கு வருவதற்கு தயாராக இருக்கிறார்கள். மரியாதையோடு அதே பதவியைக் கொடுத்தால் வந்துவிடுவதாக கூறியுள்ளார்கள். அதிமுகவில் கிடைக்கும் மரியாதை வேறு எந்தக் கட்சியிலும் கிடைக்காது” எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் தவெகவில் இணைந்தனர். தற்போது தவெகவின் நிர்வாகப் பொதுச் செயலாளராகவும் செங்கோட்டையன் பதவி வகித்து வருகிறார்.
மேலும், சமீபத்தில் வடசென்னையைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ வி.எஸ். பாபு, அதிமுக மூத்த தலைவர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் தவெகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Those who went to TVK are ready to return to AIADMK! Ex Minister Velumani
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை! தவெக அரசு மீது எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு

இபிஎஸ்தான் எங்கள் பொதுச் செயலர்: எஸ்.பி. வேலுமணி பேட்டி! சி.வி. சண்முகம் எங்கே?

இபிஎஸ்ஸை முதல்வராக்கியது சசிகலாதான்! அதிமுகவில் பிரிந்தவர்கள் சேர வேண்டும்! எஸ்.பி. வேலுமணி

தவெகவுக்கு ஆதரவா? சி.வி சண்முகம் - எஸ்.பி. வேலுமணி ஆலோசனை! | ADMK | TVK
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




