மும்பை டெஸ்ட்: மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 451/7
வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 451 ரன்கள் எடுத்து,


மும்பை: வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 451 ரன்கள் எடுத்து, இங்கிலாந்தை விட 51 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா இங்கிலானது அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி , மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் மூன்றாவது நாளான இன்று ஒரு விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் இந்தியா தனது முதல் இன்னிங்க்ஸை தொடர்ந்தது.
சிறப்பாக விளையாடிய துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய் டெஸ்ட் போட்டியில் தனது எட்டாவது சதத்தினை நிறைவு செய்தார். உணவு இடைவேளையின் பொழுது இந்தியா இரண்டு விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்திருந்தது. உணவு இடைவேளைக்கு பிறகு நன்கு விளையாடி வந்த முரளி விஜய் ரஷீத் பந்துவீச்சத்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு பிறகு கேப்டன் கோலி களமிறங்கினார். ஆனாலும் ஆறு முனையில் மூன்று பேர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்தியா தடுமாறியது.தேநீர் இடைவேளையின் போது இந்தியா தனது முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 348 ரன்களை எடுத்திருந்தது. அப்பொழுது அணித்தலைவர் விராத் கோலி 83 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
அதற்கு பிறகு தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோலி 187 பந்துகளில் தனது சத்தினை பூர்த்தி செய்தார். இதில் 11 பவுண்டரிகள் அடங்கும். ஆட்டத்தின் 129-ஆவது ஓவரில் இந்தியா 400 ரன்களைக் கடந்தது.
இறுதியாக முன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 451 ரன்களை எடுத்திருந்தது. விராத் கோலி 147 ரன்களுடனும், ஜெயந்த் யாதவ் 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து சார்பாக ஜோ ரூட் ,ஆதில் ரஷீத் மற்றும் மொயீன் அலி ஆகிய மூவரும் தலா 2 விக்கட்டுளை வீழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...