கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மும்பை டெஸ்ட் உணவு இடைவேளை: கோலி இரட்டை சதம்; இந்தியா 579/7 

வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், உணவு   இடைவேளையின் போது, இந்தியா ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 579 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :25 ஜனவரி 2024, 6:33 am

DIN

மும்பை: வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், உணவு   இடைவேளையின் போது, இந்தியா ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 579 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா இங்கிலானது அணிகள்  மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி , மும்பையின் வான்கடே மைதானத்தில்  நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் நான்காம் நாளான இன்று உணவு இடைவேளையின் போது இந்தியா தனது முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 579 ரன்களை எடுத்துள்ளது.

அணித்தலைவர் விராத் கோலி 212 ரன்களுடனும், ஜெயந்த் யாதவ் 92 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

முன்னதாக 7 விக்கெட்டுகள்  இழப்பிற்கு 451 ரன்கள் என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் இந்தியா ஆட்டத்தை தொடங்கியது. 147 ரன்களுடன் தொடர்ந்த கோலி 302 பந்துகளில் தனது இரட்டை சதத்தை நிறைவு செய்தார். இதில் 23 பவுண்டரிகளும் அடங்கும்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.