ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த அஸ்வின் முதல் இடத்தையும் ஜடேஜா 2-ம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.
சென்னை டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக ஒரு டெஸ்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஜடேஜா. இதையடுத்து அவர் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். அஸ்வின் முதல் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். தரவரிசையில் முதலிரண்டு இடங்களை இந்திய பெளலர்கள் பிடிப்பது அரிதான ஒன்றாகும். இதற்கு முன்பு பேடி - சந்திரசேகர் ஆகிய இருவரும் 1974-ல் முதலிரண்டு இடங்களைப் பிடித்தார்கள். இதற்குப் பிறகு இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள் அஸ்வினும் ஜடேஜாவும்.
ஆல்ரவுண்டர் பட்டியலிலும் அஸ்வின் தனது முதல் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். இதில் ஜடேஜா மூன்றாம் இடத்துக்கு உயர்ந்துள்ளார்.
பேட்டிங்கில் ஸ்மித் முதல் இடத்திலும் கோலி இரண்டாம் இடத்திலும் உள்ளார்கள். முச்சதம் அடித்த கருண் நாயர் 55-வது இடத்தில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழகம் எதிர்கொள்ளும்!

முன்னேற்றத்துக்கு வித்திடும் கணக்கெடுப்பு!

மா்ம காய்ச்சலில் சிறுமி உயிரிழப்பு

பெண் குழந்தைகளை காப்போம் - கற்பிப்போம்: விழிப்புணா்வு பிரசார வாகனம் தொடங்கிவைப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



