கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தலையில் 'பவுன்சர்' பந்து தாக்கி இறந்த ஆஸி., வீரர் ஹியூக்ஸ் குடும்பத்துக்கு ரூ.20 கோடி நிவாரணம்!

கிரிக்கெட் விளையாடும் போது  தலையில் 'பவுன்சர்' பந்து தாக்கி இறந்த ஆஸி., வீரர் ஹியூக்ஸ் குடும்பத்துக்கு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ரூ.20 கோடியை நிவாரணமாக வழங்கியுள்ளது.

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:52 am

DIN

சிட்னி: கிரிக்கெட் விளையாடும் போது  தலையில் 'பவுன்சர்' பந்து தாக்கி இறந்த ஆஸி ., வீரர் ஹியூக்ஸ் குடும்பத்துக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ரூ.20 கோடியை நிவாரணமாக வழங்கியுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ். கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் சிட்னியில் நடந்த முதல் தர போட்டி ஒன்றில் விளையாடும் பொழுது, சக வீரர் சீன் அபோட் வீசிய பவுன்சர் பந்து ஹியூக்ஸின் பின் தலையில் தாக்கியது. இதில் நிலைகுலைந்து மைதானத்தில் சரிந்த அவர், சில நாட்களில் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் கோமாவிலேயே மரணம் அடைந்தார். கிரிக்கெட் உலகையே இந்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பிலிப்சின் மரணம் குறித்து நியூ சவுத்வேல்ஸ் மாகாண சிறப்பு விசாரணை அதிகாரி மைக்கேல் பர்னஸ் தனியாக விசாரணை நடத்தினார். அவரது விசாரணை அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் ஹியூக்சின் மறைவுக்கு சீறி வந்த பந்து குறித்த அவரது தவறான கணிப்பே காரணம்; யாரும் பொறுப்பு இல்லை    என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஹியூக்ஸ் மரணம் ஒரு விபத்து என்றாலும் அவரது குடும்பத்துக்கு கூடுதலான உதவி தொகையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்  வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பிலிப் ஹியூக்ஸ் குடும்பத்துக்கு ரூ.20 கோடியை நிவாரண உதவியாக வழங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.