கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட்: 220 ரன்களுக்கு வங்கதேசம் 'ஆல்  அவுட்'!

இங்கிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில்   வங்கதேசம் 220 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:49 am

DIN

டாக்கா: இங்கிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில்   வங்கதேசம் 220 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்தது.  துவக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் சிறப்பாக விளையாடி 147 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்து மொயின் அலி பந்தில் ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்தபடியாக மொமினுல் ஹக் 111 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்த இவரும் மொயின் அலி பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார். இவருக்கு பின்னால் வந்த யாரும் சரியாக விளையாடாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.  இதனையடுத்து 41-வது ஓவரிலிருந்து 9 விக்கெட்டுகளை மடமடவென இழந்து அடுத்த 22.5 ஓவர்களில் 220 ரன்களுக்குச் சுருண்டது வங்கதேசம்.

இங்கிலாந்து தரப்பில் மொயின் அலி 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வோக்ஸ் அருமையாக வீசி 3 விக்கெட்டுகளையும் ஸ்டோக்ஸ் மீண்டும் 11 ஓவர்களில் வெறும் 13 ரன்களையே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

ஒரு கட்டத்தில் 171/1 என்ற வலுவான நிலையில் இருந்த வங்கதேசம் அடுத்த 49 ரன்களில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 220 ரன்களுக்குச் சுருண்டது குறிப்பிடத்தக்கது.

பின்னர் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்க்ஸை துவக்கியது. ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து மூன்று விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. குக் (14), டக்கெட் (7), பலன்ஸ் (9) ஆகியோர்     ஆட்டம் இழந்தனர். ஜோ ரூட் 15 ரன்களுடனும் , மொயின் அலி 2 ரன்களுடனும் களத்தில்  உள்ளனர்.

வங்கதேச தரப்பில் ஆஃப் ஸ்பின்னர் மெஹதி ஹசன் இரண்டு விக்கெட்டுகளையம், ஷாகிப் அல் ஹசன் ஒரு  விக்கெட்டையும் கைப்பற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.