186 வாரங்களுக்குப் பிறகு புதிய நெ.1 டென்னிஸ் வீராங்கனை!

நெ.1 பட்டத்தை 186 வாரங்களாகத் தக்கவைத்துக்கொண்டிருந்த செரீனா வில்லியம்ஸ் இந்தத் தோல்வியின் மூலம்...
186 வாரங்களுக்குப் பிறகு புதிய நெ.1 டென்னிஸ் வீராங்கனை!

அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. மகளிர் பிரிவில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், செரீனா வில்லியம்ஸ், கரோலினா பிளிஸ்கோவா எதிர்கொண்டார். சிறப்பாக ஆடிய பிளிஸ்கோவா, 6-2 7-6 (7-5) என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸைத் தோற்கடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனால் டென்னிஸ் உலகுக்குப் புதிய நெ.1 வீராங்கனை கிடைத்துள்ளார். 

நெ.1 பட்டத்தை 186 வாரங்களாகத் தக்கவைத்துக்கொண்டிருந்த செரீனா வில்லியம்ஸ் இந்தத் தோல்வியின் மூலம் இரண்டாம் இடத்துக்கு இறங்கியுள்ளார். அமெரிக்க ஓபன் போட்டியில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் முதல்நிலை வீராங்கனையாக உயர்வு பெற்றுள்ளார். அமெரிக்க ஓபன் பட்டத்தை கெர்பரால் வெல்லமுடியாமல் போனாலும் அவர் நெ.1 வீராங்கனையாகத் திகழ்வார். 

சமீபத்தில் செரீனா வில்லிமஸ் ஒரு சாதனையை நிகழ்த்தினார். 4-வது சுற்றில் வெற்றி பெற்றபோது கிராண்ட்ஸ்லாம் போட்டியில் தனது 308-வது பெற்றியைப் பெற்றார் செரீனா. இதன் மூலம் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தினார். அதாவது, கடந்த 1968-ம் ஆண்டு, ஓபன் எரா (தொழில் முறை வீரர்களுடன் அமெச்சூர் வீரர்களும் மோதுவது) முறை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்றவர்கள் வரிசையில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 307 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் இருந்தார். செரீனா, அவரது சாதனையை தகர்த்தார். மகளிர் பிரிவில் இந்த வரிசையில், மார்ட்டினா நவரத்லோவா 306 வெற்றிகளை பெற்றிருந்தார். அதனையும் அவர் முறியடித்தார். ஆனால் அரையிறுதியில் தோற்றது மூலம், நெ.1 பட்டத்தையும் அமெரிக்க ஓபன் போட்டியை வெல்லும் வாய்ப்பையும் இழந்துள்ளார் செரீனா. 23-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் நல்ல வாய்ப்பையும் அவர் இழந்தது இன்னும் பெரிய சோகம்.  

கிராண்ட் ஸ்லாம் போட்டியில் செரீனா, 309 வெற்றியும், 43 தோல்வியும் கண்டிருக்கிறார். ஃபெடரரோ, 307 ஆட்டங்களில் வெற்றியும், 51 ஆட்டங்களில் தோல்வியையும் எதிர்கொண்டிருக்கிறார்.

வலது முழங்காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை காரணமாக ஃபெடரர் ஓய்வெடுத்து வருகிறார். இதனால், அவர் அமெரிக்க ஓபன் போட்டியில் பங்கேற்வில்லை. எனவே, அடுத்த சீசனிலிருந்துதான் ஃபெடரர் தனது வெற்றி கணக்கை அதிகப்படுத்த முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com