துலீப் ட்ராபி - இந்தியா ப்ளூ அணி வெற்றி; ஜடேஜா அபாரம்!

துலீப் ட்ராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா ப்ளூ அணி 355 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ரெட் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது
துலீப் ட்ராபி - இந்தியா ப்ளூ அணி வெற்றி; ஜடேஜா அபாரம்!
Updated on
1 min read

துலீப் ட்ராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா ப்ளூ அணி 355 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ரெட் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.

மூன்று விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் என்ற முந்தைய நாள் ஸ்கோருடன், இன்றைய நாள் ஆட்டத்தை  தொடங்கிய இந்தியா ப்ளூ அணி, ஐந்து விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்திருந்த பொழுது, அணித்தலைவர் கவுதம் காம்பிர் ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார். இதன் மூலம் இந்தியா ரெட் அணிக்கு 516 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் ஆட்டத்தை தொடங்கிய இந்தியா ரெட் அணியில் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. அதிக பட்சமாக ஸ்ரீகர் தவான் 29 ரன்கள் எடுத்தனர். மற்றவர்களனைவரும் சொற்ப ரன்களில்  ஆட்டமிழந்தனர். இறுதியில் அந்த அணி 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 355 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ப்ளூ அணி வெற்றி பெற்றது.இந்தியா ப்ளூ அணி சார்பில் ரவீந்திர  ஜடேஜா 5 விக்கட்டுகளை வீழ்த்தினார். இவர் முதல் இன்னிங்சிலும் 5 விக்கட்டுகளை  வீழ்த்தினார்  என்பது குறிப்பிடத்தக்கது.

சுருக்கமான ஸ்கோர்:

இந்தியா ப்ளூ (முதல் இன்னிங்ஸ்)-693/6 (புஜாரா-256 அ.இ; அமித் மிஸ்ரா-2/171); 179/5-டிக் (இரண்டாவது இன்னிங்ஸ்) (மயங் அகர்வால்-52;  குல்தீப் யாதவ்-3/62); இந்தியா ரெட்  (முதல் இன்னிங்ஸ்) - 356 (ஸ்டூவர்ட் பின்னி-98,மிஸ்ரா-65,ஜடேஜா-5/95); 161 (இரண்டாவது இன்னிங்ஸ்); (ஜடேஜா-5/76)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com