கால்பந்து தரவரிசை இந்தியா முன்னேற்றம்

சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 4 இடங்கள் முன்னேறி 148-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
Published on
Updated on
1 min read

சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 4 இடங்கள் முன்னேறி 148-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த 3-ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற பியூர்ட்டோ ரிகோவுக்கு எதிரான நட்பு ரீதியிலான கால்பந்து ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டதன் மூலம் தரவரிசையில் ஏற்றம் கண்டிருக்கிறது இந்திய அணி.
2015 ஏப்ரலுக்குப் பிறகு முதல்முறையாக தரவரிசையில் முதல் 150 இடங்களுக்குள் முன்னேறியிருக்கிறது இந்திய அணி. ஆசிய அளவிலான தரவரிசையில் இந்திய அணி 26-ஆவது இடத்தில் உள்ளது.
சர்வதேச தரவரிசையில் ஆர்ஜென்டீனா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பெல்ஜியம், ஜெர்மனி, கொலம்பியா, பிரேசில் ஆகிய அணிகள் அடுத்த 4 இடங்களில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com