17 வயது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், ஹைதரபாத் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் புணே அணி சார்பாக விளையாடுகிறார்.
புணேவில் இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 24-ஆவது லீக் ஆட்டத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ்-சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
புணே அணியில் இடம்பெற்றதன் மூலம் ஐபிஎல் போட்டியில் விளையாடிய மூன்றாவது இளம் வீரர் என்கிற பெருமையை வாஷிங்டன் சுந்தர் பெற்றுள்ளார். காயத்தால் அஸ்வின் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியதால் அவருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம்பெற்றுள்ளார். 2016-ல் நடைபெற்ற U-19 உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்காக சுந்தர் விளையாடினார்.
ஹைதராபாத் அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றிகளையும், புணே 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றிகளையும் பெற்றுள்ளன. இவ்விரு அணிகளும் இதுவரை 2 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், ஹைதராபாத் ஒரு வெற்றியும், புணே ஒரு வெற்றியும் பெற்றுள்ளன.
ஐபிஎல்-லில் விளையாடிய இளம் வீரர்கள்:
17 வயது 177 நாள்கள்: சர்ஃபராஸ் கான்
17 வயது 179 நாள்கள்: சங்வான்
17 வயது 199 நாள்கள்: வாஷ்ங்டன் சுந்தர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


