ஒருநாள் போட்டி: நியூஸிலாந்து அபார வெற்றி!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது...
ஒருநாள் போட்டி: நியூஸிலாந்து அபார வெற்றி!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நியூஸிலாந்தின் வாங்கரியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

டி20 போட்டிகளில் அசத்தி வரும் கெய்ல், 22 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். ஹோப் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனதால் மே.இ. அணி மேலும் தடுமாறியது. தொடக்க வீரர் லூயிஸ் 76 ரன்களும் பவல் 59 ரன்களும் எடுத்து மே.இ. அணிக்கு ஓரளவு நம்பிக்கை அளித்தார்கள். இறுதியில் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது மே.இ. அணி. நியூஸிலாந்துத் தரப்பில் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுகளையும் ஆஸ்லே 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

எளிதான இந்த இலக்கை 5 விக்கெட்டுகளை இழந்து 46 ஓவர்களில் எட்டியது நியூஸிலாந்து அணி. தொடக்க வீரர்களான மன்ரோவும் வொர்க்கரும் 108 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளத்தை அமைத்தார்கள். டெய்லர் 49 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் பெரிய சிரமங்கள் எதுவுமின்றி வெற்றியை அடைந்தது நியூஸிலாந்து அணி.

3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் நியூஸிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com