நாளை 'பாக்ஸிங் டே' டெஸ்ட்: ஆஸி. அணியில் மாற்றம்

4-ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்...
நாளை 'பாக்ஸிங் டே' டெஸ்ட்: ஆஸி. அணியில் மாற்றம்

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. 

இதில், முதல் 3 டெஸ்ட் போட்டிகளிலும் அபார வெற்றிகளைப் பதிவு செய்து ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றி ஆஷஸ் கோப்பையை வென்றது.

இதையடுத்து கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்த நாள் நடைபெறும் போட்டியை பாக்ஸிங் டே டெஸ்ட் என்று அழைப்பர். இதில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

3-ஆவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் காலில் காயம் ஏற்பட்டது. எனவே அவருக்கு ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். 

இதனால் நாளை நடைபெறவுள்ள 4-ஆவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு பதிலாக ஜாக்ஸன் பேர்ட், ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் ஜாக்ஸன் பேர்ட்டுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்தார். 

பாக்ஸிங் டே டெஸ்ட் ஆஸ்திரேலிய அணி ஆடும் லெவன் விவரம் பின்வருமாறு:

ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், கேமரூன் பென்க்ராஃப்ட், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், மிட்செல் மார்ஷ், டிம் பெய்ன் (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ், நாதன் லயன், ஜாஷ் ஹாசில்வுட், ஜாக்ஸன் பேர்ட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com