சாம்பியன்ஸ் டிராபி: நியூசிலாந்து பேட்டிங்!

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
சாம்பியன்ஸ் டிராபி: நியூசிலாந்து பேட்டிங்!

எட்பாஸ்டனில் இன்று நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், நியூஸிலாந்தும் மோதிவருகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

முதல் ஆட்டமான இதில் வென்று சாம்பியன்ஸ் டிராபியை வெற்றியோடு தொடங்குவதற்கு இரு அணிகளுமே தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணி பேட்டிங், பெளலிங் என அனைத்துத் துறைகளிலும் வலுவாக உள்ளது. டேவிட் வார்னர், ஆரோன் ஃபிஞ்ச் ஆகியோர் ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸை தொடங்கவுள்ளனர். ஃபார்மில் இருக்கும் வார்னர், நியூஸிலாந்து பெளலர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிடில் ஆர்டரில் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், கிறிஸ் லின் கூட்டணி பலம் சேர்க்கிறது. வேகப்பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேஸில்வுட், பட் கம்மின்ஸ், ஜான் ஹேஸ்டிங்ஸ் ஆகிய நால்வர் கூட்டணி ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பலமாக திகழ்கிறது. 1970-களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி, நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் (ஆன்டி ராபர்ட்ஸ், மைக்கேல் ஹோல்டிங், காலின் கிராஃப்ட், ஜோயல் கார்னர்) கூட்டணியை வைத்து வெற்றிகளைக் குவித்ததைப் போன்று, சாம்பியன்ஸ் டிராபியில் ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் உள்ளது ஆஸ்திரேலியா.

நியூஸிலாந்து அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் மார்ட்டின் கப்டில், கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், கோரே ஆண்டர்சன் போன்றவர்கள் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த அணியின் ரன் குவிப்பு அமையும். இவர்களில் கேன் வில்லியம்சன் மட்டுமே தொடர்ச்சியாக ரன் குவித்து வருகிறார். வேகப்பந்து வீச்சில் டிரென்ட் போல்ட், டிம் செளதி கூட்டணியையும், சுழற்பந்து வீச்சில் மிட்செல் சேன்ட்னரையும் நம்பியுள்ளது நியூஸிலாந்து.

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் ஃபிஞ்ச், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), கிளன் மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், ஹென்றிகஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ஜான் ஹேஸ்டிங்ஸ், மிட்செல் ஸ்டார்க், பட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேஸில்வுட்.

நியூஸிலாந்து: மார்ட்டின் கப்டில், லுக் ரோஞ்சி (விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், நீல் புரூம், கோரே ஆண்டர்சன், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சேன்ட்னர், ஆடம் மில்னி, டிம் செளதி, டிரென்ட் போல்ட்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com