சாம்பியன்ஸ் டிராபி: ஷிகர் தவன் அபார சதம்!

சாம்பியன்ஸ் டிராபி: ஷிகர் தவன் அபார சதம்!

இலங்கைக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி ஆட்டத்தில் தொடக்க வீரர் ஷிகர் தவன் சதமடித்துள்ளார்.
Published on

இலங்கைக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி ஆட்டத்தில் தொடக்க வீரர் ஷிகர் தவன் சதமடித்துள்ளார். 

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் இந்த ஆட்டத்தில் இலங்கையுடன் மோதுகிறது இந்திய அணி. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் அரையிறுதிக்கு முன்னேறும். நடப்புச் சாம்பியனான இந்தியா, தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் உரிய உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் களம் இறங்கியுள்ளனர். அதேவேளையில் இலங்கை அணியானது, தனது முந்தைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் 96 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளது. ஆகவே, இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டு அந்தத் தோல்வியிலிருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணியினர் உள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அதேபோல இந்தப் போட்டியிலும் அஸ்வின் இடம்பெறவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய அதே அணியே இந்தமுறையும் இடம்பெற்றுள்ளது.

தொடக்க வீரர்களான ரோஹித்தும் தவனும் இந்தப் போட்டியிலும் சிறப்பாக விளையாடி 138 ரன்கள் குவித்தார்கள். ரோஹித் சர்மா 78 ரன்களில் வெளியேறினார். எதிர்பாராதவிதமாக விராட் கோலி டக் அவுட் ஆனார். யுவ்ராஜ் சிங்கும் 7 ரன்களில் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினார்.

தொடக்கம் முதல் அபாரமாக விளையாடிய தவன் 112 பந்துகளில் சதமடித்தார். இது அவருடைய 10-வது சதமாகும். பிறகு அவர் 125 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஐசிசி போட்டிகளில் அதிக சதமடித்த இந்தியர்கள்

7 கங்குலி (32 இன்னிங்ஸ்கள்) 

7 சச்சின் (58 இன்னிங்ஸ்கள்) 

5 தவன் (15 இன்னிங்ஸ்கள்) 

3 சேவாக் (32 இன்னிங்ஸ்கள்) 

ஒருநாள் போட்டிகளில் தவன்

ஐசிசி போட்டிகள்: 5 சதங்கள் (15 இன்னிங்ஸ்கள்) 

இதர போட்டிகள்: 5 சதங்கள் (62 இன்னிங்ஸ்கள்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com