இறுதிப்போட்டிக்கு முதலாவதாக முன்னேறுவது யார்? இங்கிலாந்து-பாகிஸ்தான் இன்று மோதல்
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதியில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.


சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதியில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.
இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, 50 ஓவர் போட்டிகளில் கோப்பை வெல்லும் நீண்ட நாள் கனவை நனவாக்கும் முயற்சியுடன் களம் காண்கிறது. இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.
பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற இருதரப்பு ஒருநாள் தொடரில் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற அனுபவம் இங்கிலாந்துக்கு உள்ளது. அதில் அந்த அணி 444 என்ற உலக சாதனை ஸ்கோரை பதிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணியைப் பொருத்த வரையில், பென் ஸ்டோக்ஸ் மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக விளங்குகிறார். பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் அவர் எதிரணியை திணறடிப்பார் என எதிர்பார்க்கலாம். அதேபோல், ஜோ ரூட்டும் பேட்டிங்கில் அசத்துவார் எனத் தெரிகிறது.
இங்கிலாந்தின் பேட்டிங்கிற்கு அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜேசன் ராய் அருமையான தொடக்கத்தை தர உள்ளனர். மிடில் ஆர்டரில் கேப்டன் மோர்கன், ஜோஸ் பட்லர் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.
பந்துவீச்சு மூலம் எதிரணியைப் பந்தாட, ஜேக் பால், லியாம் பிளங்கெட், மார்க் வுட் ஆகியோர் உள்ளனர்.
பாகிஸ்தானைப் பொருத்த வரையில், இலங்கைக்கு எதிரான வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய அணியின் தொடக்க வீரர் ஃபஹார் ஜமான், இங்கிலாந்துக்கு எதிராகவும் திறனை வெளிப்படுத்துவார் என நம்பலாம்.
பாகிஸ்தானின் மிடில் ஆர்டர் பேட்டிங் சற்று கவலைக்குரியதாக உள்ளது குறித்து பேசிய கேப்டன் சர்ஃப்ராஸ், தேவையேற்பட்டால் முகமது ஹபீஸ், ஷோயிப் மாலிக் ஆகியோர் களமிறக்கப்படுவார்கள் என்று கூறினார்.
அந்த அணியின் பந்துவீச்சைப் பொருத்த வரையில், முகமது ஆமிர், ஜுனைத் கான், ஹசன் அலி ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.
அணிகள் விவரம்
இங்கிலாந்து
இயான் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி,
ஜானி பேர்ஸ்டோவ்,
ஜேக் பால், சாம் பில்லிங்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர், லியாம் பிளங்கெட், ஆதில் ரஷீத், ஜோ ரூட்,
ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லே, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஸ்டீவன் ஃபின்.
பாகிஸ்தான்
சர்ஃப்ராஸ் கான் (கேப்டன்), அகமது ஷாஸாத்,
அஸார் அலி, பாபர் ஆஸம்,
ஃபஹீம் அஷ்ரஃப்,
ஃபஹார் ஜமான், ஹாரிஸ் சோஹைல், ஹசன் அலி, இமத் வாசிம்,
ஜுனைத் கான்,
முகமது ஆமிர், முகமது ஹபீஸ், ஷாதாப் கான், ஷோயிப் மாலிக்.
போட்டி நேரம்: மாலை 3 மணி நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...