ஜூஹாய் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
சீனாவின் ஜூஹாய் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் காலிறுதியில் யூகி பாம்ப்ரியும், ஆர்ஜென்டீனாவின் அகஸ்டின் வெலாட்டியும் மோதினர். இந்த ஆட்டத்தில் யூகி பாம்ப்ரி 6-1, 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது வெலாட்டி களைப்பு காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.
இதையடுத்து காலிறுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட யூகி பாம்ப்ரி அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்த சீசனில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் யூகி பாம்ப்ரி, அது குறித்து கூறியதாவது: அரையிறுதிக்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது மிகக் கடினமான போட்டியாகும். அதுவும் போட்டித் தரவரிசை கிடைக்காதபோது இன்னும் கடினமாகிவிடுகிறது. இதுவரை பெற்ற வெற்றிகளை மறந்துவிட்டு அரையிறுதி ஆட்டத்தின் மீது கவனம் செலுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.