அஸ்லான் ஷா கோப்பை: மன்தீப் ஹாட்ரிக்; இந்தியா அபார வெற்றி!

ஹாட்ரிக் கோல்கள் அடித்து இந்திய அணியைப் பெரும் நெருக்கடியில் இருந்து காப்பாற்றியுள்ளார் மன்தீப் சிங்.
அஸ்லான் ஷா கோப்பை: மன்தீப் ஹாட்ரிக்; இந்தியா அபார வெற்றி!

45, 51, 58-வது நிமிடங்களில் கோல்கள். ஹாட்ரிக் கோல்கள் அடித்து இந்திய அணியைப் பெரும் நெருக்கடியில் இருந்து காப்பாற்றியுள்ளார் மன்தீப் சிங்.

அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா - ஜப்பான் அணிகள் இன்று மோதின. உலகளவில் 16-வது இடத்தில் உள்ள ஜப்பான் அணி, 6-வது இடத்தில் உள்ள இந்திய அணிக்குக் கடும் சவாலாக அமைந்தது. 

முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன. ஆனால் 43 மற்றும் 45-வது நிமிடங்களில் ஜப்பான் கோல் அடித்து அசத்தலான முன்னிலை பெற்றது. இதனால் இந்திய அணிக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதன்பிறகு தன்னுடைய திறமையை நிரூபித்து இந்திய அணியைப் பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றினார் மன்தீப். ஜப்பான் 2-வது கோல் அடித்தவுடன் அடுத்தச் சில நொடிகளில் மன்தீப் கோல் அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தார். இதன்பிறகு மீண்டும் ஜப்பான் கோலடித்து முன்னிலை பெற்றது. 

இதையடுத்து கிடைத்த இரண்டு பெனால்டி கார்னர்களையும் இந்திய அணி வீணடித்தது. ஆனால் 51-வது நிமிடத்தில் கோல் அடித்தார் மன்தீப். இதனால் ஆட்டம் சமனில் முடியும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் போட்டி முடிவடைய மூன்று நிமிடங்கள் இருந்தபோது ஹாட்ரிக் கோல் அடித்தார் மன்தீப் சிங். அவருடைய அபார திறமையால் இந்திய அணி பெரும் நெருக்கடியில் இருந்து மீண்டது.

கடைசியில் 4-3 என்கிற கோல் கணக்கில் வெற்றி பெற்றது இந்திய அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com