2018 உலகக் கோப்பை கால்பந்து அணிகளின் பட்டியல் வெளியீடு!

2018-ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் பங்கேற்கும் அணிகளின் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
2018 உலகக் கோப்பை கால்பந்து அணிகளின் பட்டியல் வெளியீடு!

2018-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டித் தொடர் 60 ஆண்டுகளில் முதன்முறையாக ரஷியாவில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் அணிகளின் விவரம் அடங்கிய பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த தகுதிச் சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் சாம்பியன் இதாலி தகுதிச் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டு வெளியேறியது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்கிறது.

அணிகளின் விவரம் பின்வருமாறு:-

ஐரோப்பாவில் இருந்து,

ரஷியா, பெல்ஜியம், இங்கிலாந்து, ஜெர்மனி, ஐய்ஸ்லாந்து, போலாந்து, ஸ்பெயின், செர்பியா, போர்ச்சுகல், ஃப்ரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, குரோஷியா, ஸ்வீடன், டென்மார்க்.

தென் அமெரிக்காவில் இருந்து,

பிரேசில், உருகுவே, அர்ஜென்டினா, கொலம்பியா, பெரூ.

வடக்கு, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் இருந்து,

மெக்ஸிகோ, கோஸ்டாரீகா, பனாமா.

ஆப்பிரிக்காவில் இருந்து,

நைஜீரியா, எகிப்து, செனெகல், மொராக்கோ, டுனிஸியா.

ஆசியாவில் இருந்து,

ஈரான், தென்கொரியா, ஜப்பான், சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com