
பிரபல கிரிக்கெட் வீரர் முரளி விஜய் மூன்றாவது முறையாகத் தந்தை ஆகியுள்ளார்.
2012-ல் நிகிதாவைத் திருமணம் செய்துகொண்டார் முரளி விஜய். இருவருக்கும் நிவான் என்கிற மகனும் இவா என்கிற மகளும் உள்ள நிலையில் தற்போது இன்னொரு மகன் பிறந்துள்ளான்.
நிவான், குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டுள்ள புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து, இரண்டு ராக் ஸ்டார்கள். ஒருவர் இன்னொருவரை உலகுக்கு அறிமுகப்படுத்துகிறார். நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் விஜய்.
முரளி விஜய்க்குச் சக கிரிக்கெட் வீரர்கள் சமூகவலைத்தளங்கள் வழியாக வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.