சுடச்சுட

  

  இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்தும் குஜராத் வீரர்கள்!

  By சநகன்  |   Published on : 09th August 2017 01:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pandiyadebutxx

   

  மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவுக்குப் பதிலாக அக்‌ஷர் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 30 ஒருநாள், 7 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அக்‌ஷர் படேல், இதுவரை டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகவில்லை. இதையடுத்து இந்திய அணியில் குஜராத் வீரர்களின் எண்ணிக்கை நான்கு ஆக உயர்ந்துள்ளது. 

  இந்திய டெஸ்ட் அணியில் அதிக வீரர்களைக் கொண்ட மாநிலமாக குஜராத் உள்ளது. புஜாரா, ஜடேஜா, ஹார்திக் பாண்டியா, அக்‌ஷர் படேல் ஆகியோர் குஜராத்தைச் சேர்ந்த வீரர்கள். இவர்களை அடுத்து, டெல்லி வீரர்கள் 3 பேர் (கோலி, தவன், இஷாந்த் சர்மா) இந்திய அணியில் அதிகமாக உள்ளார்கள். 

  இந்திய அணி: கே.எல்.ராகுல் (கர்நாடகா), ஷிகர் தவன் (டெல்லி), சேதேஷ்வர் புஜாரா (குஜராத்), விராட் கோலி (டெல்லி), அஜிங்க்ய ரஹானே (மும்பை), அஸ்வின் (தமிழ்நாடு), விருத்திமான் சாஹா (மேற்கு வங்கம்), குல்தீப் யாதவ் (உத்தர பிரதேசம்), உமேஷ் யாதவ் (மஹாராஷ்டிரா), முகமது சமி (மேற்கு வங்கம்), புவனேஸ்வர் குமார் (உத்தர பிரதேசம்), அபினவ் முகுந்த் (தமிழ்நாடு), ஹார்திக் பாண்டியா (குஜராத்), அக்‌ஷர் படேல் (குஜராத்), இஷாந்த் சர்மா (டெல்லி), ரோஹித் சர்மா (மும்பை), ஜடேஜா (குஜராத்).

  இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான இடையிலான 3-ஆவது டெஸ்ட் போட்டி வரும் 12-ஆம் தேதி பல்லகெலேவில் தொடங்குகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai