சுடச்சுட

  
  hardik_pandya

   

  இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்தது. இதில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

  இதையடுத்து கொழும்புவில் நடந்த 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.

  இந்நிலையில், 3-ஆவது டெஸ்ட் போட்டி பல்லகெலேவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

  இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 2-ஆம் நாள் மதிய உணவு இடைவேளை வரை 122 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 487 ரன்கள் எடுத்து இருந்தது.

  அப்போது, இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா 86 பந்துகளில் சதம் விளாசினார். 96 பந்துகளில் 7 இமாலய சிக்ஸர்களுடன் 8 பவுண்டரிகளை விரட்டி 108 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

  சர்வதேச அரங்கில் ஹார்திக் பாண்டியா அடிக்கும் முதல் சதம் இதுவாகும். உள்ளூர் முதல்-தரப் போட்டிகளிலேயே அதிகபட்சமாக 90 ரன்கள் தான் எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்திய அணியில் 8-ஆவது வரிசையில் களமிறங்கிய வீரர் அடித்த அதிவேக சதமாகவும் இது பதிவானது.

  மேலும், ஒரே ஓவரில் 26 ரன்களை விளாசித் தள்ளினார். டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஓவரில் இந்திய வீரர் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையையும் படைத்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai