சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சீர் லீடரான ஸீவா-வின் சுட்டித்தனங்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ்-இன் விசில் ஆந்தமுக்கு ஸீவா ஆடும் ஆட்டமும், பின்னர் சிஎஸ்கே......சிஎஸ்கே......சிஎஸ்கே...... என்ற அவரது கோஷமும் சமூகவலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சீர் லீடரான ஸீவா-வின் சுட்டித்தனங்கள்
Published on
Updated on
2 min read

தற்போது 11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 வருட தடைக்குப் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்கியுள்ளது. மேலும் இதில் மகேந்திர சிங் தோனி அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்து வெற்றிகளைப் பெற்றுத் தருகிறார்.

இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இதேபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இம்முறை சிஎஸ்கே அணி தான் கோப்பையை நிச்சயம் கைப்பற்றும் என ஐபிஎல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனில் தோனியின் அதிரடி ஆட்டத்துக்கு இணையாக மைதானத்தில் அவரது மகள் ஸீவா செய்யும் சுட்டித்தனங்கள் பலரது மனங்களைக் கவர்ந்து வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மகள் ஸீவா, ரசிகர்களின் தேவதையாகத் திகழ்கிறார். அவர் செய்யும் ஒவ்வொரு குறும்புச் செயல்களையும் அவரது தாயார் சாக்ஷி மற்றும் தந்தை தோனி ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஸூவாவுக்கென பிரத்தியேக இன்ஸ்டாகிராம் பக்கம் உருவாக்கப்பட்டது. அதில் அவருடைய புகைப்படங்கள், விடியோக்கள் அடங்கிய அத்தனை குறும்புகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

அவ்வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ்-இன் விசில் ஆந்தமுக்கு ஸீவா ஆடும் ஆட்டமும், பின்னர் சிஎஸ்கே......சிஎஸ்கே......சிஎஸ்கே...... என்ற அவரது கோஷமும் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com