உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: 4-ஆவது முறையாக பதக்கம் வென்றார் பி.வி.சிந்து

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தொடர்ந்து 2-ஆவது முறையாக வெள்ளிப்பதக்கத்தை வென்றார். 
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: 4-ஆவது முறையாக பதக்கம் வென்றார் பி.வி.சிந்து

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தொடர்ந்து 2-ஆவது முறையாக வெள்ளிப்பதக்கத்தை வென்றார். 

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவில் நடைபெற்றது. இதில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டிக்கு தொடர்ந்து 2-ஆவது முறையாக முன்னேறினார். இறுதிப்போட்டியில் அவர் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொண்டார். 

இதன் முதல் செட்டில்  சிந்து கரோலினாவுக்கு ஈடுகொடுத்து விளையாடினார். ஆனால், கரோலினா 21-19 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். முதல் செட்டை கைப்பற்றிய ஆதிக்கத்துடன் கரோலினா சிந்துவுக்கு 2-ஆவது செட்டில் நெருக்கடி கொடுத்தார். முதல் செட்டில் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஈடுகொடுத்த சிந்து, 2-ஆவது செட்டில் சோபிக்க தவறினார். 

அதன் விளைவாக கரோலினா 21-10 என்ற புள்ளிக் கணக்கில் 2-ஆவது செட்டையும் எளிதில் கைப்பற்றினார். இதன்மூலம், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 19-21, 10-21 என்ற  நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார். 

கடந்த உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரிலும் இறுதிப் போட்டி வரை முன்னேறிய சிந்து, இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார். 

இந்த தொடரில் வெள்ளிப்பதக்கத்தை வென்றதன் மூலம், உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தலா 2 வெண்கலம் மற்றும் 2 வெள்ளிப்பதக்கத்தை அவர் வென்றுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com