லார்ட்ஸ் டெஸ்ட் இந்தியாவுக்கு கடினமாக இருக்கும்: மெக்ரத் கணிப்பு

முதல் டெஸ்ட் போட்டியில் தோற்ற நிலையில், லார்ட்ஸ் டெஸ்ட் இந்தியாவுக்கு சவால் நிறைந்ததாகவும், கடினமாகவும் இருக்கும் என கிளென் மெக்ரத் தெரிவித்துள்ளார்.
லார்ட்ஸ் டெஸ்ட் இந்தியாவுக்கு கடினமாக இருக்கும்: மெக்ரத் கணிப்பு

முதல் டெஸ்ட் போட்டியில் தோற்ற நிலையில், லார்ட்ஸ் டெஸ்ட் இந்தியாவுக்கு சவால் நிறைந்ததாகவும், கடினமாகவும் இருக்கும் என கிளென் மெக்ரத் தெரிவித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து 2-ஆவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ரத் கூறியதாவது:

இங்கிலாந்திடம் அதன் சொந்த மண்ணில் முதல் டெஸ்ட் போட்டியை இழந்த நிலையில், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 2-ஆவது டெஸ்ட் போட்டி இந்தியாவுக்கு கடினமாகவும், சவால் நிறைந்ததாகவும் இருக்கும். இருப்பினும் இதுபோன்ற சூழ்நிலைகளை இந்திய அணி எதிர்கொண்டுள்ளது. எனவே 2-ஆவது டெஸ்டில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் என நம்புகிறேன்.

விராட் கோலி மற்றும் இஷாந்த் ஷர்மாவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. இதர வீரர்களும் நிச்சயம் தங்களின் சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும். அதுபோல இங்கிலாந்து அணியும் இந்திய அணியின் விக்கெட்டுகளை வீழ்த்த சரியான வியூகம் வகுத்து அதில் வெற்றிபெற்றது. எனவே இந்த தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும்.

விராட் கோலியிடம் மிகச் சிறந்த திறமை உள்ளது. அவர் தரவரிசையில் முதலிடத்தில் இருக்க தகுதி உடையவர். தற்போதைய நிலையில், அவர் தனது கிரிக்கெட் வாழ்வில் பாதி நிலையை தான் கடந்துள்ளார். எனவே இப்போதே உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் என்று கூற முடியாது. இருப்பினும் திறமையான வீரர் என்பதில் சந்தேகமில்லை.

ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அது இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான தொடரில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இது நிச்சயம் இந்திய அணிக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது என்றார்.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி, அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கிறது. பின்னர் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com