இந்திய அணிக்குத் தேர்வாகாதது மனத்தைப் பாதிக்கிறது: ஸ்ரேயாஸ் ஐயர் வருத்தம்!

சிறப்பாக விளையாடி, ரன்கள் குவித்தாலும் இந்திய அணிக்குத் தேர்வாகாமல் இருப்பது...
இந்திய அணிக்குத் தேர்வாகாதது மனத்தைப் பாதிக்கிறது: ஸ்ரேயாஸ் ஐயர் வருத்தம்!
Updated on
1 min read

பர்மிங்ஹாமில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில் இரண்டாம் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 9-ம் தேதி தொடங்கியது. இந்த டெஸ்டில் இந்தியா 1 இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 

இன்றைய தேதியில் மயங்க் அகர்வால், பிருத்வி ஷா, விஹாரி போன்றோரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதற்கு முன்பு ஷ்ரேயாஸ் ஐயருக்கு இதுபோன்று பலரும் ஆதரவுக்குரல் எழுப்பினார்கள். எனினும் ஸ்ரேயாஸ் ஐயரால் இந்திய அணிக்குள் நுழைந்து முத்திரை பதிக்கமுடியவில்லை. இதை அவர் எப்படி உணர்கிறார்?

பொறுமையைக் கடைப்பிடிப்பது கடினமாக உள்ளது. சிறப்பாக விளையாடி, ரன்கள் குவித்தாலும் இந்திய அணிக்குத் தேர்வாகாமல் இருப்பது அது உங்களை மனத்தளவில் பாதிக்கிறது. தரமான வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும்போது உங்கள் பங்களிப்பு தடுமாற்றத்தைக் காண்கிறது. இதை எதிர்கொண்டு கவனம் செலுத்த வேண்டியுள்ளது. என்று கூறியுள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய ஏ அணி, தென் ஆப்பிரிக்க ஏ அணியை 1-0 என டெஸ்ட் தொடரில் தோற்கடித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com