இந்தியா அற்புதமான பந்துவீச்சு: மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து 84/4

இங்கிலாந்து அணி மதிய உணவு இடைவேளையின்போது 35 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்துள்ளது...
இந்தியா அற்புதமான பந்துவீச்சு: மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து 84/4

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில், இங்கிலாந்து அணி மதிய உணவு இடைவேளையின்போது 35 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்துள்ளது.

டிரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்டின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி சரிந்தது. ஹார்திக் பாண்டியா அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டை வீழ்த்தினார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 161 ரன்களை மட்டுமே எடுத்தது. முன்னதாக இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்பிறகு தன்னுடைய 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி, 110 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நேற்று இங்கிலாந்து அணி 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்திருந்தது. 

இந்நிலையில் இன்று, தொடக்க வீரர்களான குக்கும் ஜென்னிங்ஸும் சுலபமாக வீழ்ந்தார்கள். குக் 17 ரன்களிலும் ஜென்னிங்ஸ் 13 ரன்களிலும் இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு ரூட்டும் போப்பும் சில ஓவர்கள் தாக்குப்பிடித்தார்கள். ஆனாலும் இருவருமே ஸ்லிப் பகுதிகளில் ராகுலும் கோலியும் பிடித்த அற்புதமான கேட்சுகளால் வெளியேறினார்கள். ரூட் 13 ரன்களில் பூம்ரா பந்துவீச்சிலும் போப் 16 ரன்களில் ஷமி பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தார்கள். 

4-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி, 35 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி கையில் 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற இன்னமும் 437 ரன்கள் எடுக்கவேண்டியுள்ளது. இதனால் இந்த டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com