கேரள வெள்ள நிவாரணம்: ஆட்ட ஊதியத்தை வழங்கியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

பரிசளிப்பு விழாவில் பேசிய கோலி, இந்த வெற்றியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு அர்ப்பணிப்பதாக...
கேரள வெள்ள நிவாரணம்: ஆட்ட ஊதியத்தை வழங்கியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள்!
Published on
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டை 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்திய அணி.

டெஸ்ட் தொடரில் 2-0 என்ற இங்கிலாந்து முன்னிலை பெற்ற நிலையில் மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் டிரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 329 ரன்களையும், இங்கிலாந்து 161 ரன்களையும் எடுத்தன. இதைத் தொடர்ந்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் கோலி (103), புஜாரா (72), பாண்டியா (52) ஆகியோரின் அபார ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் நேற்றைய ஆட்டத்தின் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்து தோல்வியின் விளிம்பில் இருந்தது. 

5-ம் நாளான இன்று 317 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இங்கிலாந்து. கடைசியாக, ஆண்டர்சன் 11 ரன்களில் அஸ்வினின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  இதனால் மூன்றாவது டெஸ்டை இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டுள்ளது. ரஷித் 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியத் தரப்பில் பூம்ரா 5 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும் அஸ்வின், ஷமி, பாண்டியா ஆகிய மூவரும் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. நான்காவது டெஸ்ட், ஆகஸ்ட் 30 அன்று தொடங்கவுள்ளது. 

இந்நிலையில் ஆட்ட நாயகனாக இந்திய கேப்டன் விராட் கோலி தேர்வாகியுள்ளார். பரிசளிப்பு விழாவில் பேசிய கோலி, இந்த வெற்றியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு அர்ப்பணிப்பதாகக் கூறினார். 

மேலும் கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதியாக இந்த டெஸ்ட் போட்டிக்கான ஆட்ட ஊதியத்தை இந்திய அணியினர் வழங்கியுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com