இந்தியா - மே.இ. தொடருக்கான போட்டி அட்டவணை அறிவிப்பு: சென்னையில் நடைபெறவுள்ள டி20 ஆட்டம்!

அக்டோபர் - நவம்பர் மாதங்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்கிறது...
இந்தியா - மே.இ. தொடருக்கான போட்டி அட்டவணை அறிவிப்பு: சென்னையில் நடைபெறவுள்ள டி20 ஆட்டம்!

அக்டோபர் - நவம்பர் மாதங்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்கிறது. 2 டெஸ்டுகள், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 ஆட்டங்களில் பங்கேற்கவுள்ளது. இதற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இந்திய அணி ஆசியப் போட்டியில் பங்கேற்கிறது. துபை, அபுதாபி நகரங்களில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி, செப்டம்பர் 15-ல் தொடங்கி செப்டம்பர் 28 அன்று நிறைவுபெறுகிறது. அதற்குப் பிறகு அடுத்தச் சில நாள்களில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆரம்பமாகிறது.

டெஸ்ட் தொடர்

முதல் டெஸ்ட்: அக்டோபர் 4-8 ராஜ்கோட்
2-வது டெஸ்ட்: அக்டோபர் 12-16 ஹைதராபாத்
 

ஒருநாள் தொடர்

முதல் ஒருநாள் ஆட்டம்: அக்டோபர் 21, குவாஹட்டி
2-வது ஒருநாள் ஆட்டம்: அக்டோபர் 24, இந்தூர்
3-வது ஒருநாள் ஆட்டம்: அக்டோபர் 27, புணே

4-வது ஒருநாள் ஆட்டம்: அக்டோபர் 29, மும்பை
5-வது ஒருநாள் ஆட்டம்: நவம்பர் 1, திருவனந்தபுரம்

டி20 தொடர்

முதல் டி20: நவம்பர் 4, கொல்கத்தா
2-வது டி20: நவம்பர் 6, கான்பூர்/லக்னோ
3-வது டி20: நவம்பர் 11, சென்னை.

இதற்கடுத்து, இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. தொடரின் முதல் போட்டியான டி20 தொடர், நவம்பர் 21-ல் பிரிஸ்பேனில் ஆரம்பமாகவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com