100 ரன்கள் முன்னிலை: நம்பிக்கையுடன் விளையாடும் இந்திய அணி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 100 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையை அடைந்துள்ளது...
100 ரன்கள் முன்னிலை: நம்பிக்கையுடன் விளையாடும் இந்திய அணி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 100 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையை அடைந்துள்ளது. 

அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு விளையாடிய ஆஸ்திரேலிய அணியை 235 ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்தது இந்திய அணி. இதனால் முதல் இன்னிங்ஸில் 15 ரன்கள் முன்னிலை பெற்றது. 

ஆட்டம் சாதகமாக அமைவதால் இந்தியத் தொடக்க வீரர்களான முரளி விஜய்யும் ராகுலும் நம்பிக்கையுடன் விளையாடினார்கள். இந்தக் கூட்டணி முதல்முறையாக வெளிநாட்டில் அரை சதம் எடுத்தது. ஆரம்பத்தில் இருவரும் மிகக் கவனமாக விளையாடினார்கள். முதல் 9 ஓவர்களில் 11 ரன்கள்தான் கிடைத்தன. இதன்பிறகு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்றார் ராகுல். கம்மின்ஸ் வீசிய 15-வது ஓவரில் ஒரு சிக்ஸும் பவுண்டரியும் அடித்தார். 53 பந்துகள் எதிர்கொண்டு 18 ரன்கள் எடுத்த முரளி விஜய் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் நன்கு விளையாடி வந்த ராகுல் தவறான ஷாட்டால் 44 ரன்களில் ஹேஸில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். டி20 ஆட்டத்தில் அடிக்கவேண்டிய ஷாட்டை டெஸ்ட் கிரிக்கெட்டில் பயன்படுத்த முயன்று ஏமாற்றமடைந்தார். புஜாரா போல பக்குவத்துடன் விளையாடிருந்தால் ராகுலால் சதமடித்திருக்கமுடியும். ஆனால் ஒரு நல்ல வாய்ப்பை அவர் வீணடித்தார். 

3-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 11, கோலி 2 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 101 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது இந்திய அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com