வேர்ல்ட் டூர் ஃபைனல்ஸ்: உலகின் நெ.1 வீராங்கனையை வென்றார் பி.வி.சிந்து!

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 14-21, 21-16, 21-18 என்ற செட்களில் வென்று... 
வேர்ல்ட் டூர் ஃபைனல்ஸ்: உலகின் நெ.1 வீராங்கனையை வென்றார் பி.வி.சிந்து!
Updated on
1 min read

உலகின் தலைசிறந்த 8 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் வகையில் உலக பாட்மிண்டன் சம்மேளன வேர்ல்ட் டூர் ஃபைனல்ஸ் போட்டி ஆண்டு இறுதியில் நடத்தப்படுகிறது.  சீனாவின் குவாங்ஷுவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் துவக்க ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றார். ஜப்பானின் அகேன் யெமகுச்சியை 24-22, 21-15 என்ற நேர் செட்களில் வென்றார். 

இன்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் உலகின் நெ.1 வீராங்கனையான சீன தைபேவைச் சேர்ந்த தாய் ஹு யிங்கை எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 14-21, 21-16, 21-18 என்ற செட்களில் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை அடைந்துள்ளார் சிந்து. தாய் ஹு யிங்கிடம் கடந்த ஆறு ஆட்டங்களில் தோற்ற சிந்து, இந்த வெற்றியின் மூலம் புதிய அத்தியாத்தைத் தொடங்கியுள்ளார். வெள்ளியன்று  அமெரிக்க வீராங்கனை பெய்வென்னை எதிர்கொள்கிறார் சிந்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com