சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

ரஞ்சி: 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தமிழ்நாடு

மொஹலியில் நடைபெற்று வரும் ரஞ்சி ஆட்டத்தில் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது...

News image
Updated On :15 டிசம்பர் 2018, 9:08 am

எழில்

மொஹலியில் நடைபெற்று வரும் ரஞ்சி ஆட்டத்தில் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் நாள் முடிவில் தமிழக அணி 9 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் 215 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது தமிழக அணி. மன்ப்ரீத் சிங் கோனி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தமிழக அணியில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 71 ரன்கள் எடுத்துள்ளார்.

இதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் பஞ்சாப் அணி 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் எடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.