உலக டூர் ஃபைனல்ஸ்: இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

உலக டூர் ஃபைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்... 
உலக டூர் ஃபைனல்ஸ்: இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
Updated on
1 min read

சீனாவில் நடைபெற்று வரும் உலக டூர் ஃபைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். 

குவாங்ஷு நகரில் நடைபெற்ற இப்போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் உலகின் 3-ம் நிலை வீராங்கனையான சிந்து, 21-16, 25-23 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனோனை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். கடைசி செட் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. இருவரில் யார் வெல்லக்கூடும் என்று கணிப்பது கடினமாக இருந்தது. இந்நிலையில் முக்கியமான கட்டங்களில் சிறப்பாக விளையாடி, பெரிய சவாலில் வெற்றி கண்டார் சிந்து. 

ஞாயிறு அன்று நடைபெறவுள்ள இறுதிச்சுற்றில் ஜப்பானின் நஸோமி ஒகுஹராவை எதிர்கொள்கிறார் சிந்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com