டி20 அணிக்குத் திரும்பினார் தோனி: மூன்று தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு!
இந்திய டி20 அணிக்கு தோனி மீண்டும் திரும்பியுள்ளார். இரு அணிகளிலும் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார்...


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர், நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் ஆகியவற்றுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் தொடர் முடிந்தபிறகு இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் , ஜனவரி 12 முதல் தொடங்கவுள்ளது. மேலும் நியூஸிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 23 முதல் தொடங்கவுள்ள நிலையில் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் பிப்ரவரி 6 அன்று தொடங்குகிறது. இந்த மூன்று தொடர்களுக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய டி20 அணிக்கு தோனி மீண்டும் திரும்பியுள்ளார். இரு அணிகளிலும் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணி:
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), கேஎல் ராகுல், ஷிகர் தவன், ராயுடு, தினேஷ் கார்த்திக், கெதர் ஜாதவ், எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், ஜடேஜா, புவனேஸ்வர் குமார், பூம்ரா, கலீல் அஹமது, ஷமி.
நியூஸிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணி:
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), கேஎல் ராகுல், ஷிகர் தவன், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், கெதர் ஜாதவ், எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, கிருனால் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், புவனேஸ்வர் குமார், பூம்ரா, கலீல் அஹமது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...