அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த தெ.ஆ. வீரர்: புதிய வரலாறு படைத்தார் டேல் ஸ்டெயின்!
தென் ஆப்பிரிக்காவின் செஞ்சுரியனில் நடைபெறும் பாக்ஸிங் டெஸ்டில் புதிய சாதனை படைத்துள்ளார் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின்...


தென் ஆப்பிரிக்காவின் செஞ்சுரியனில் நடைபெறும் பாக்ஸிங் டெஸ்டில் புதிய சாதனை படைத்துள்ளார் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின்.
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்த டெஸ்டில் 1 விக்கெட் எடுத்தால் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த தென் ஆப்பிரிக்க வீரர் என்கிற பெருமையை டேல் ஸ்டெயின் பெறுவார் என்கிற நிலைமை இருந்தது.
இதையடுத்து தொடக்க வீரர் ஃபகார் ஸமானை 12 ரன்களில் வீழ்த்தினார் ஸ்டெயின். இதனால் ஷான் பொல்லாக்கைப் பின்னுக்குத் தள்ளி 422 விக்கெட்டுகளுடன் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த தென் ஆப்பிரிக்க வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் டேல் ஸ்டெயின்.
கடந்த 10 வருடங்களாக 421 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்தார் ஷான் பொல்லாக். ஆனால் அந்த இலக்கை அடைய அவருக்கு 108 டெஸ்டுகள் தேவைப்பட்டன. எனினும் 422 விக்கெட்டுகளை 89 டெஸ்டுகளில் எடுத்துள்ளார் 35 வயது ஸ்டெயின்.
அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் - தென் ஆப்பிரிக்க வீரர்கள்
டேல் ஸ்டெயின் - 422 விக்கெட்டுகள் (89 டெஸ்டுகள்)
ஷான் பொல்லாக் - 421 விக்கெட்டுகள் (108 டெஸ்டுகள்)
மகாயா எண்டினி - 390 விக்கெட்டுகள் (101 டெஸ்டுகள்)
ஆலன் டொனால்ட் - 330 விக்கெட்டுகள் (72 டெஸ்டுகள்)
மார்னே மார்கல் - 309 விக்கெட்டுகள் (86 டெஸ்டுகள்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...