பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

W 4 . W . . . W W . W . . . W: 15 பந்துகளில் ஆறு விக்கெட்டுகள்! அசத்திய போல்ட்!

கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று தொடங்கிய பாக்ஸிங் டே டெஸ்டில் இலங்கைக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி வருகிறது நியூஸிலாந்து அணி...

News image
Updated On :27 டிசம்பர் 2018, 8:46 am

எழில்

கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று தொடங்கிய பாக்ஸிங் டே டெஸ்டில் இலங்கைக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி வருகிறது நியூஸிலாந்து அணி.

முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 178 ரன்கள் எடுத்த நிலையில், 4 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்து விளையாடி வந்த இலங்கை அணியைத் திடீரென துவம்சம் செய்தார் நியூஸி. வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட். மீதமுள்ள இலங்கை அணியின் விக்கெட்டுகளை 15 பந்துகளில் 4 ரன்களுக்குள் சுருட்டினார். அவருடைய 15 பந்துகளில் என்ன நடந்தது என்று இதைப் பார்த்தாலே புரிந்துகொள்ளலாம்.

W 4 . W . . . W W . W . . . W.

இதனால் கடைசி ஆறு விக்கெட்டுகளை 10 ரன்களுக்குள் இழந்த இலங்கை அணி, எதிர்பாராதவிதமாக 104 ரன்களுக்குள் சுருண்டது. இதன்பிறகு தனது 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த நியூஸிலாந்து அணி, 79 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 305 ரன்கள் முன்னிலை பெற்று 2-வது டெஸ்டை வெல்லும் நிலையில் உள்ளது நியூஸிலாந்து அணி. 

முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில் இந்த டெஸ்டை வென்று 2 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூஸிலாந்து அணி வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.