போர்ட் எலிசபத்தில் பாரம்பரிய முறையில் வரவேற்கப்பட்ட இந்திய அணி

5-ஆவது ஒருநாள் போட்டியை அடுத்து போர்ட் எலிசபத்தில் இந்திய அணிக்கு பாரம்பிரய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
போர்ட் எலிசபத்தில் பாரம்பரிய முறையில் வரவேற்கப்பட்ட இந்திய அணி

தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இதுவரை 4 போட்டிகள் நடைபெற்ற நிலையில், இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த தொடரில் முதல் 3 போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு 4-ஆவது பிங்க் ஓடிஐ-யில் த்ரில் வெற்றிபெற்று தடை போட்டது தென் ஆப்பிரிக்கா.

இதையடுத்து 5-ஆவது போட்டியில் வெற்றிபெற்று முதன்முறையாக தென் ஆப்பிரிக்க மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி பயிற்சிபெற்று வருகிறது. அதுபோல அடுத்த 2 போட்டியிலும் வென்று தொடரை சமன் செய்ய தென் ஆப்பிரிக்க அணி ஆர்வம் காட்டுகிறது.

இந்நிலையில், பிப்ரவரி 13-ந் தேதி செயின்ட் ஜார்ஜ் பார்க்கில் நடைபெறும் 5-ஆவது போட்டியில் பங்கேற்க இந்திய அணி போர்ட் எலிசபத் நகருக்கு வருகை தந்தது. அப்போது அப்பகுதியின் பாரம்பரிய முறைப்படி இந்திய அணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com