தெ.ஆ. தொடரின் அனைத்து ஆட்டங்களிலும் விளையாடிய மூன்று இந்திய வீரர்கள்!

டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்கள் அனைத்திலும் மூன்று இந்திய வீரர்களே தொடர்ந்து இடம்பெற்றுள்ளார்கள்...
தெ.ஆ. தொடரின் அனைத்து ஆட்டங்களிலும் விளையாடிய மூன்று இந்திய வீரர்கள்!
Published on
Updated on
1 min read

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 6-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 6 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை 5-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா ஒருநாள் தொடரை வென்றது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 6-ஆவது ஒருநாள் போட்டியில் புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வளிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஷர்துல் தாக்குர் அணியில் இடம்பிடித்தார். தென் ஆப்பிரிக்க அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டன. மாரிஸ், ஸாண்டோ, தாஹிர், பெஹர்டீன் ஆகியோர் தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெற்றார்கள். 

இந்நிலையில் தெ.ஆ.-வுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்கள் அனைத்திலும் மூன்று இந்திய வீரர்களே தொடர்ந்து இடம்பெற்றுள்ளார்கள்.

விராட் கோலி, பாண்டியா, பூம்ரா என மூன்று பேர் மட்டுமே டெஸ்ட், ஒருநாள் தொடர்கள் அனைத்திலும் இடம்பெற்றுள்ளார்கள்.

டெஸ்ட் தொடரில் புவனேஸ்வர் குமார், அஸ்வின், ரோஹித் சர்மா, பார்தீவ் படேல், ராகுல், இஷாந்த் சர்மா ஆகியோர் இரண்டு டெஸ்டுகளில் மட்டுமே பங்கேற்றார்கள். தவன், சாஹா, ரஹானே ஆகியோருக்கு ஒரு டெஸ்டில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்தது. 

ஒருநாள் தொடரில் இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை. ஜாதவ் முதல் மூன்று ஆட்டங்களில் இடம்பெற்றார். அதன்பிறகு காயம் காரணமாக அவர் இடம்பெறவில்லை. அந்த வாய்ப்பு ஷ்ரேயாஸ் ஐயருக்குக் கிடைத்தது. 6-வது ஒருநாள் ஆட்டத்தில் புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வளிக்கப்பட்டு ஷர்துல் தாக்குருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com