கடைசி ஆட்டத்தையும் கைப்பற்றுமா இந்தியா! 205 ரன்கள் வெற்றி இலக்கு

கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 204 ரன்கள் எடுத்துள்ளது.
கடைசி ஆட்டத்தையும் கைப்பற்றுமா இந்தியா! 205 ரன்கள் வெற்றி இலக்கு

தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இதுவரை 5 போட்டிகள் நடைபெற்ற நிலையில், இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. 

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. 

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 6-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதில் இந்திய அணியில் புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் களமிறக்கப்பட்டார்.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 46.5 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சோண்டோ 54, ஃபெலுக்வாயோ 34, டி வில்லியர்ஸ் 30 ரன்கள் சேர்த்தனர். 

இந்திய தரப்பில் ஷர்துல் தாக்கூர் 4, சாஹல் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மேலும் இந்தப் போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தியதன் மூலம் குல்தீப் யாதவ் இரண்டு புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்.

மேலும் சில சாதனைகளும் நிகழ்த்தப்பட்டன. அந்த சாதனை விவரங்கள் பின்வருமாறு:

ஒருநாள் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்:

  • ஜவகல் ஸ்ரீநாத் - 2002/03 - நியூஸிலாந்து - 18 விக்கெட்டுகள்
  • அமித் மிஸ்ரா - 2013 - ஜிம்பாப்வே - 18 விக்கெட்டுகள்
  • பேட் பேட்டர்ஸன் - 1987 - இந்தியா - 17 விக்கெட்டுகள்
  • கே மேத்யூஸ் - 1994 - ஆஸ்திரேலியா - 17 விக்கெட்டுகள்
  • குல்தீப் யாதவ் - 2018 - தென் ஆப்பிரிக்கா - 17 விக்கெட்டுகள்

ஒருநாள் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர்கள்:

  • அமித் மிஸ்ரா - 2013 - ஜிம்பாப்வே - 18 விக்கெட்டுகள்
  • குல்தீப் யாதவ் - 2018 - தென் ஆப்பிரிக்கா - 17 விக்கெட்டுகள்
  • ரஷீத் கான் - 2017 - அயர்லாந்து - 16 விக்கெட்டுகள் 
  • யசுவேந்திர சாஹல் - 2018 - தென் ஆப்பிரிக்கா - 16 விக்கெட்டுகள்


ஒருநாள் தொடரில் ஒரு அணியின் சுழற்பந்துவீச்சாளர்களால் வீழ்த்தப்பட்ட அதிகபட்ச விக்கெட்டுகள்:

  • 2014-ல் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை - 7 போட்டிகள் - 38 விக்கெட்டுகள்
  • 2009-ல் ஜிம்பாப்வேக்கு எதிராக வங்கதேசம் - 5 போட்டிகள் - 37 விக்கெட்டுகள்
  • 2012-ல் மே.இ.தீவுகளுக்கு எதிராக வங்கதேசம் - 5 போட்டிகள் - 33 விக்கெட்டுகள்
  • 2018-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா - 6 போட்டிகள் - 33 விக்கெட்டுகள்
  • 2014-ல் ஜிம்பாப்வேக்கு எதிராக வங்கதேசம் - 5 போட்டிகள் - 32 விக்கெட்டுகள்
  • 2009-ல் கென்யாவுக்கு எதிராக ஜிம்பாப்வே - 5 போட்டிகள் - 32 விக்கெட்டுகள்


ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த இந்தியர்கள்:

  • முகமது ஆசாருதீன் - 231 போட்டிகள் - 156 கேட்சுகள்
  • சச்சின் டெண்டுல்கர் - 333 போட்டிகள் - 140 கேட்சுகள்
  • ராகுல் டிராவிட் - 283 போட்டிகள் - 125 கேட்சுகள்
  • சுரேஷ் ரெய்னா - 223 போட்டிகள் - 100 கேட்சுகள்
  • விராட் கோலி - 208 போட்டிகள் - 100 கேட்சுகள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com