முத்தரப்பு டி20-யில் 2 ரன்னில் இங்கிலாந்து த்ரில் வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை த்ரில் வெற்றி.
முத்தரப்பு டி20-யில் 2 ரன்னில் இங்கிலாந்து த்ரில் வெற்றி

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. 

இதில் நியூஸிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதிய போட்டி ஹாமில்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் 46 பந்துகளில் 4 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 80 ரன்கள் விளாசினார். டேவிட் மாலன் 5 சிக்ஸர்களுடன் 53 ரன்கள் குவித்தார். நியூஸிலாந்து தரப்பில் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடந்த போட்டியில் சதமடித்த கப்டில் 4 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் விளாசினார். முன்ரோ 7 சிக்ஸர்களை விளாசி 57 ரன்கள் சேர்த்தார். 

இருந்தாலும் ஓவர்கள் முடிவடைந்த நிலையில், இங்கிலாந்து அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ஆட்ட நாயகனாக இயன் மோர்கன் தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் ரன்ரேட் அடிப்படையில் நியூஸிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

முன்னதாக, இந்த தொடர் முழுவதும் தோல்வியே சந்திக்காமல் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ள ஆஸ்திரேலிய அணி முதலாவதாக இறுதிப்போட்டியில் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com