அதிவேகமாக 100 விக்கெட்டுகள் வீழ்த்தி ஸ்டெயின் புது சாதனை

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் வீழ்த்தி ஸ்டெயின், புது சாதனைப் படைத்துள்ளார்.
அதிவேகமாக 100 விக்கெட்டுகள் வீழ்த்தி ஸ்டெயின் புது சாதனை

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கேப் டௌனில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் டூபிளெஸிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

டிவில்லியர்ஸ் 65, டூபிளெஸிஸ் 62 ரன்கள் சேர்த்தனர். இந்திய தரப்பில் புவனேஸ்வர் குமார் 4, அஸ்வின் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 2-ஆம் நாள் தேநீர் இடைவேளை வரை 7 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ஒரு கட்டத்தில் 92 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் ஜோடி சேர்ந்த ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்குவிப்பில் ஈடுபட்டது. குறிப்பாக பாண்டியா 46 பந்துகளில் அரைசதம் கடந்து 81 ரன்களுடனும், புவனேஸ்வர் குமார் 24 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் பிலாண்டர் 3, டேல் ஸ்டெயின் 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர். 

இப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், அதிவேகமாக 100 விக்கெட்டுகள் வீழ்த்தி புது சாதனைப் படைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டிய வீரர்களில் மின்னல் வேகப்பந்துவீச்சாளர் என்று அழைக்கப்பட்ட ஆலன் டொனால்டு சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார்.

சாதனை விவரம் பின்வருமாறு:

டேல் ஸ்டெயின் - 20 டெஸ்ட்
ஆலன் டொனால்டு - 22 டெஸ்ட்
நிதினி/பிலாண்டர் - 23 டெஸ்ட்
ஷான் பொல்லாக் - 26 டெஸ்ட்
மோர்னி மார்கல் - 29 டெஸ்ட்
ஜாக்குவஸ் கல்லிஸ் - 49 டெஸ்ட்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com