அடுத்த டெஸ்டிலும் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள்: தெ.ஆ. பயிற்சியாளர் தகவல்!

வேகப்பந்து வீச்சாளர்களை மனத்தில் கொண்டு திட்டமிடும் பயிற்சியாளர் நான்... 
அடுத்த டெஸ்டிலும் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள்: தெ.ஆ. பயிற்சியாளர் தகவல்!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 போட்டிகளைக் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது.  இரு இன்னிங்ஸ்களிலுமாக 9 விக்கெட்டுகள் வீழ்த்திய தென் ஆப்பிரிக்காவின் பிலாண்டர் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த டெஸ்ட் போட்டியில் ஸ்டெய்ன், பிலாண்டர், மார்கல், ரபடா என நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம்பிடித்தார்கள். ஸ்டெய்ன் காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகினால் தென் ஆப்பிரிக்காவின் அணுகுமுறை மாறாது என்கிறார் தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் ஒடிஸ் கிப்ஸன்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: 

வேகப்பந்து வீச்சாளர்களை மனத்தில் கொண்டு திட்டமிடும் பயிற்சியாளர் நான். அணியில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை நுழைக்கமுடியுமா என்றுதான் பார்ப்பேன். ஆடுகளத்தின் தன்மை அதற்குப் பொருந்துமா என்று சோதித்துப் பார்க்கவேண்டும். இல்லையென்றில் அதற்கேற்றபடி அணியின் வடிவத்தை மாற்றிக்கொள்வோம். 

சொந்த மண்ணில் விளையாடும்போது உங்கள் பலத்துக்கு ஏற்றவாறு விளையாடவேண்டும். இந்தியா போன்ற சிறந்த அணியைத் தோற்கடிக்க விரும்பினால், முன்பு செய்ததை விடவும் அதில் சிறிது
மாற்றம் செய்து முயற்சி செய்யவேண்டும். 

முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடியது போல தொடர்ந்து விளையாடுவதை நான் ஊக்குவிப்பேன். இதுபோன்ற விக்கெட்டுகளில் உங்கள் பெயரைத் தாங்கிய பந்துகள் உங்களை நோக்கி வரும். அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் அது நம்மை வீழ்த்திவிடும். 15 ஓவர்கள் விளையாடி ரன்கள் எதுவும் எடுக்காவிட்டால் பயன் இல்லை. களத்தில் இருக்கும்போது நமக்கான பந்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com