
ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - ஹங்கேரியின் டிமியா பாபோஸ் ஜோடி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
மெல்போர்ன் நகரில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவின் அரையிறுதிச்சுற்றில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - ஹங்கேரியின் டிமியா பாபோஸ் மற்றும் மார்டினஸ் சான்சஸ் - டெமோலினர் ஜோடிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 7-5, 5-7, 10-6 என்ற செட் கணக்கில் போபண்ணா ஜோடி வென்று இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளது.
இறுதிச்சுற்றில் போபண்ணா - பாபோஸ் ஜோடி, பவிக் - டப்ரோவ்ஸ்கி ஜோடியை எதிர்கொள்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.