

ஐபிஎல் போட்டிக்காக பெங்களூரில் இன்றும் நாளையும் நடைபெறும் வீரர்கள் ஏலத்தில், 361 இந்தியர்கள் உள்பட 578 வீரர்கள் களத்தில் உள்ளனர்.
இதுவரை சென்னை அணிக்காக விளையாடிய அஸ்வின் இந்தமுறை பஞ்சாப் அணிக்குத் தேர்வாகியுள்ளார். அவரை ரூ. 7.60 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் அஸ்வின் கூறியதாவது: பஞ்சாப் அணிக்குத் தேர்வானதில் மகிழ்ச்சி. கேஸினோ ஆட்டம் போல ஏலத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கும். அருமையான நினைவுகளுக்கு நன்றி சென்னை சூப்பர் கிங்ஸ் என ட்வீட் செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.