திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி-லைக்கா கோவை கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான டிஎன்பிஎல் 13-ஆவது ஆட்டம் திண்டுக்கலில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
டாஸ் வென்ற கோவை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து திருச்சி அணியின் பரத்சங்கர், கேப்டன் பாபா இந்திரஜித் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். எனினும் தொடக்கமே திருச்சி அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. பரத் சங்கர் 24, பாபா இந்திரஜித் 3, மணி பாரதி 10, அரவிந்த் 0, சந்திரசேகர் கணபதி 1, லட்சுமி நாராயணன் 11, சஞ்சய் 3 என சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர்.
சுரேஷ்குமார் 35, சோனு யாதவ் 21 ஆகியோர் மட்டுமே நிலைத்து ஆடி ஆட்டமிழந்தனர். தட்சிணாமூர்த்தி குமரன் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்த திருச்சி அணி வெறும் 124 ரன்களையே எடுத்தது. கோவை தரப்பில் அஜித்ராம், மணிகண்டன் தலா 2 விக்கெட்டையும், விக்னேஷ், நடராஜன், பிரசாந்த் ராஜேஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
கோவை அபாரம்: 125 ரன்கள் வெற்றி இலக்குடன் கோவை அணி தரப்பில் கேப்டன் அபிநவ் முகுந்த், ஷாருக் கான் ஆகியோர் களமிறங்கினர்.
தொடக்கம் முதலே இரு வீரர்களும் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
3 சிக்ஸர், 8 பவுண்டரியுடன் 40 பந்துகளில் 67 ரன்களை குவித்து ஷாருக்கான், 7 ரன்களுடன் அந்தோணி தாஸ் ஆகியோர் குமரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். 42 ரன்களுடன் அபிநவ் முகுந்தும், ரன் ஏதுமின்றி ரவிக்குமாரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
13.4 ஓவர்களிலேயே 2 விக்கெட்டை மட்டும் இழந்த கோவை அணி 125 ரன்கள் எடுத்து வென்றது. திருச்சி தரப்பில் குமரன் 2 விக்கெட்டை வீழ்த்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

உடல் எடை குறையும்! ஆளி விதையில் இவ்வளவு நன்மைகளா?

திமுகவின் மறுபிரதியே தவெக! பாஜக விமர்சனம்

சர்தார் - 2 வெளியீட்டுத் தேதி!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



