விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

இனப்பாகுபாடு புகார்: ஜெர்மன் அணியில் இருந்து விலகினார் மெஸுட் ஒஸில்

இனப்பாகுபாடு கடைபிடிக்கப்படுவதாகக் கூறி ஜெர்மனி தேசிய கால்பந்து அணியில் இருந்து விலகினார் முன்னணி வீரரான மெஸþட் ஒஸில்.

News image
Updated On :24 ஜூலை 2018, 12:51 am IST

இனப்பாகுபாடு கடைபிடிக்கப்படுவதாகக் கூறி ஜெர்மனி தேசிய கால்பந்து அணியில் இருந்து விலகினார் முன்னணி வீரரான மெஸþட் ஒஸில்.
ஜெர்மனியில் மொத்தம் 30 லட்சத்துக்கு மேற்பட்ட துருக்கி வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். அந்த இனத்தைச் சேர்ந்த வீரரான மெஸுட் தேசிய கால்பந்து அணியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் உலகக் கோப்பை போட்டிக்கு முன்னர் மே மாதம் அவர் துருக்கி அதிபர் எர்டோகனை சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
இதனால் பல்வேறு தரப்பினர் அவரைக் கண்டித்தனர். ஜெர்மனி அணிக்கு விசுவாசமாக இருப்பாரா என கேள்வி எழுப்பினர். இதனால் உலகக் கோப்பை அணியில் இருந்து அவர் விளையாட அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் அணியில் இனப்பாகுபாடு கடைபிடிக்கப்படுகிறது. ஜெர்மன் கால்பந்து கூட்டமைப்பு துருக்கி வம்சாவளி வீரர்களை அவமதித்து, பாகுபாடு காண்பிக்கிறது எனக் கூறி தேசிய அணியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். 
எனக்கு இரு இதயங்கள் உள்ளன. ஒன்று ஜெர்மனி, மற்றொன்று துருக்கி, பழைய பரம்பரை வேர்களை மறக்கக் கூடாது என எனது தாயார் கூறியுள்ளார். அதைத் தான் நான் கடைபிடித்து வருகிறேன் என்றார். 
இதுகுறித்து ஜெர்மனி நீதித்துறை அமைச்சர் கேட்டரினா கூறுகையில், நாட்டின் நட்சத்திர வீரரான மெஸுட் பாகுபாடு பின்பற்றுவதாகக் கூறி தேசிய அணியில் இருந்து விலகுவது அபாயகரமான அறிகுறி என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.