முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி: முஸ்தபா ஹஸல், ரோவன் அரபிக்கு சாம்பியன் பட்டம்

உலக ஜூனியர் ஸ்குவாஷ் தனிநபர் சாம்பியன் போட்டியில் எகிப்தின் முஸ்தபா ஹஸல், ரோவன் அரபி சாம்பியன் பட்டம் வென்றனர்.

News image
Updated On :24 ஜூலை 2018, 12:48 am IST

உலக ஜூனியர் ஸ்குவாஷ் தனிநபர் சாம்பியன் போட்டியில் எகிப்தின் முஸ்தபா ஹஸல், ரோவன் அரபி சாம்பியன் பட்டம் வென்றனர்.
இப்போட்டிகள் கடந்த 18-ஆம் தேதி எக்ஸ்பிரஸ் மாலில் தொடங்கியது. இந்நிலையில் ஆடவர் மற்றும் மகளிர் இறுதி ஆட்டங்களுக்கு எகிப்து அணி வீரர், வீராங்கனைகளே தகுதி பெற்றனர்.
ஆடவர் இறுதி ஆட்டத்தில் முஸ்தபா ஹசல் முதல்நிலை வீரரும் சக நாட்டவரான மார்வன் டரேக்கை எதிர் கொண்டார். இதில் 11-7, 13-11, 11-4 என்ற புள்ளிக்கணக்கில் நடப்பு சாம்பியன் மார்வனை அதிர்ச்சித் தோல்வியுறச் செய்து பட்டம் வென்றார் முஸ்தபா.
அதே நேரத்தில் மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனை ரோவன் அரபி சக வீராங்கனையான ஹனியா ஹம்மாமியை 11-4, 11-9, 10-12, 11-9 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்த வெற்றி மூலம் உலக ஸ்குவாஷ் அரங்கில் எகிப்து தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலை நாட்டி உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.