செஸ் போட்டியில் 2-ஆம் இடம் பிடித்த 4 வயது குழந்தை

கர்நாடகத்தில் நடைபெற்ற செஸ் போட்டியில் 4 வயது குழந்தை சான்வி அகர்வால் 2-ஆம் இடம் பிடித்து ஆசிய செஸ் தொடருக்கு தகுதி பெற்றுள்ளார்.
செஸ் போட்டியில் 2-ஆம் இடம் பிடித்த 4 வயது குழந்தை
Published on
Updated on
2 min read

கர்நாடகத்தில் நடைபெற்ற செஸ் போட்டியில் 4 வயது குழந்தை சான்வி அகர்வால் 2-ஆம் இடம் பிடித்து ஆசிய செஸ் தொடருக்கு தகுதி பெற்றுள்ளார்.

தேசிய அளவிலான 32-ஆவது 7 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கர்நாடகத்தில் உள்ள தும்கூரில் நடைபெற்றது. இதில் 5 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் சண்டிகரைச் சேர்ந்த 4 வயது குழந்தை சான்வி அகர்வால் கலந்துகொண்டார். இதில் 4 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்துள்ளார். ஷாஷினி புவி, 5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். 2-ஆம் இடம்பிடித்ததன் மூலம் சான்வி அகர்வால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 6 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இதுகுறித்து குழந்தை சான்வி அகர்வால் கூறுகையில்,

இதுதான் தேசிய அளிவில் எனது முதல் பதக்கம். இது எனது பெற்றோருக்கு நான் அளிக்கும் மிகப்பெரிய பரிசாகும். எனக்கு மிகவும் பிடித்தது ஆசியக் கண்டம். எனவே அந்த தொடரில் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். செஸ் விளையாட்டில் எனக்கு மிகவும் பிடித்தது ராஜாவும் ராணியும் தான். மேலும் இந்த பதக்கத்தை எனது 2 மாதச் சகோதரனுக்கு பரிசளிகக் விரும்புகிறேன். எனது பெற்றோர் தான் எனக்கு செஸ் விளையாட்டை கற்றுக்கொடுத்தனர். பின்னர் அதை கணினி மூலம் பயிற்சி செய்தேன் என்றார்.

செஸ் விளையாடப் பழகும் போது அவளுக்கு சரியாக பேசவும், எழுதவும் கூடத் தெரியாது. ஆனால் இந்த விளையாட்டை விரைவில் கற்றுக்கொண்டாள். மேலும் 7 வயதுடையவர்களுடன் விளையாடியது அவளுக்கு சிறப்பாக செயல்பட ஊக்கம் அளித்துள்ளது என்று சான்வியின் தந்தை அசோக் அகர்வால் தெரிவித்தார்.

சான்வி, வீட்டில் நான் செஸ் விளையாடிதைக் கண்டு அதன்மூலம் ஆர்வம் ஏற்பட்டு அதைக் கற்றுக்கொண்டாள். கிராண்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் பிரக்யானந்தா ஆகியோர் குறித்து இன்னும் அவளிடம் தெரிவிக்கவில்லை. ஆனால், விரைவில் இவர்கள் குறித்து கேட்டறிவாள் என நம்புகிறேன். எனது மகனுக்கு 2 மாதங்கள் ஆவதால் என்னால் தும்கூருக்குச் செல்ல முடியவில்லை. இருப்பினும் பதக்கத்துடன் திரும்புவேன் என்று சான்வி கூறியதை நிறைவேற்றிவிட்டாள் என்று தாயார் திவ்யா கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com