இந்திய அணிக்கு நவ்தீப் சயினி தேர்வு: கெளதம் கம்பீர் சர்ச்சைக்குரிய ட்வீட்!

5 வருடங்களுக்கு முன்பு தில்லி அணிக்கு நவ்தீப் சயினி தேர்வானபோது, அவர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர் என்று...
இந்திய அணிக்கு நவ்தீப் சயினி தேர்வு: கெளதம் கம்பீர் சர்ச்சைக்குரிய ட்வீட்!

இந்தியாவுக்கு எதிராக விளையாடும் ஆப்கானிஸ்தானின் முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 14 அன்று பெங்களூரில் நடைபெறவுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு ஐசிசி டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது. இதையடுத்து தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ளது ஆப்கானிஸ்தான்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து சாஹா காயம் காரணமாக விலகினார். இதையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். பெங்களூரில் நேற்று இந்திய அணி வீரர்களுக்கு நடைபெற்ற உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சியடையாததால் முகமது ஷமிக்குப் பதிலாக தில்லியைச் சேர்ந்த 25 வயது நவ்தீப் சயினி இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.

தில்லி அணியில் நவ்தீப் சயினி விளையாடியதில் முக்கியப் பங்கு வகித்த கெளதம் கம்பீர், சயினியின் தேர்வு குறித்து சர்ச்சைக்குரிய ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

வெளியூரைச் சேர்ந்த நவ்தீப் சயினி இந்திய அணிக்குத் தேர்வானதில், பிஷன்சிங் பேடி, சேதன் செளகான் உள்ளிட்ட தில்லி கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள் சிலருக்கு என்னுடைய அனுதாபங்கள். பெங்களூரில் கருப்புப் பட்டைகள் ரூ. 225க்கு விற்கப்படுவதாக அறிகிறேன். சார், சயினி முதலில் ஓர் இந்தியர். இதற்குப் பிறகுதான் அவர் வாழ்விடம் இடம்பிடிக்கும் என்று கூறியுள்ளார்.  

எதனால் இந்த திடீர் ட்வீட்? 

5 வருடங்களுக்கு முன்பு தில்லி அணிக்கு நவ்தீப் சயினி தேர்வானபோது, அவர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர் என்று பிஷன் சிங் பேடி, தில்லி கிரிக்கெட் சங்கத் தலைவர் அருண் ஜெட்லிக்குக் கடிதம் எழுதினார். சயினி, ஹரியானாவைச் சேர்ந்தவர். கடந்த ஒருவருடமாக தில்லியில் அவர் விளையாடவில்லை. தில்லி அணியில் இடம்பிடிக்கத் திறமையான பலர் காத்திருக்கும்போது சயினி போன்ற வெளியூரைச் சேர்ந்த ஒருவரைத் தேர்வு செய்வது சரியல்ல என்று எழுதினார். எனினும் தில்லி அணியில் சயினி இடம்பிடித்ததில் கம்பீர் முக்கியப் பங்கு வகித்தார். பேடி, செளகான் போன்ற தில்லி கிரிக்கெட் சங்க உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சயினியை தில்லி அணியில் சேர்த்து விளையாட வைத்தார் கம்பீர். தான் இந்திய அணிக்குத் தேர்வானதில் கம்பீர் தான் முக்கியக் காரணம். அவர் அளித்த ஊக்கம்தான் என்னை இந்த நிலைக்குக் கொண்டுவந்துள்ளது என்று சயினியும் கம்பீருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com