புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

இங்கிலாந்திலும் சதங்கள் விளாசும் மயங்க் அகர்வால்! விரைவில் இந்திய அணி வாய்ப்பு?

ஐபிஎல் போட்டிக்கு முன்பு இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் எங்குப் பார்த்தாலும் மயங்க் அகர்வால் பேச்சாக இருந்தது...

News image
Updated On :27 ஜூன் 2018, 11:13 am

ஐபிஎல் போட்டிக்கு முன்பு இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் எங்குப் பார்த்தாலும் மயங்க் அகர்வால் பேச்சாக இருந்தது. காரணம் உள்ளூர் போட்டிகளில் அவர் தொடர்ந்து ரன்கள் குவித்துக்கொண்டிருந்தார். இனி இப்படியொரு சீசன் அவருக்கே அமையுமா என்று மலைக்கும் அளவுக்கு. 

கடந்த உள்ளூர் சீசனில் மயங்க் அகர்வால் எடுத்த ரன்கள்: 

13,8,31,0,0,304*,176,23,90,133*,173,134,78,15,3,55,2,10,13,86,6,9,0,77,109,84,28,102,89,140,81,90.

இதையடுத்து 27 வயது மயங்க் அகர்வாலை பெங்களூர் ஐபிஎல் அணி ரூ. 1 கோடிக்குத் தேர்வு செய்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஐபிஎல் போட்டியில் சொதப்பினார். 11 ஆட்டங்களில் 120 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். அவ்வளவுதான். 

இந்நிலையில் இங்கிலாந்து சென்ற இந்திய ஏ அணியில் மயங்க் அகர்வாலும் இடம்பெற்றிருந்தார். ஐபிஎல்-லில் சொதப்பினால் இங்கிலாந்தில் வழக்கம்போல தனது ரன் வேட்டையைத் தொடர்ந்துள்ளார்.

நேற்று இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 102 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய ஏ அணி. லீசெஸ்டரில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்திய ஏ அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 104 பந்துகளில் 112 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் 72 ரன்களும் விஹாரி 69 ரன்களும் எடுத்தார்கள். கடினமான இலக்கை எதிர்கொள்ளமுடியாமல் 41.3 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய ஏ அணி அபார வெற்றி பெற்றது. தாக்குர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

இந்திய உள்ளூர் போட்டிகளில் அசத்தியதுபோல இங்கிலாந்திலும் இந்திய ஏ அணி வீரராக அசத்திக்கொண்டிருக்கிறார் மயங்க் அகர்வால்.

இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் மயங்க் அகர்வால் எடுத்த ரன்கள்

151* (106 பந்துகள்) v லீசெஸ்டெர்ஷையர்
23 (24 பந்துகள்) vs இங்கிலாந்து லயன்ஸ்
112 (102 பந்துகள்) vs மேற்கிந்தியத் தீவுகள் ஏ 
112 (104 பந்துகள்) vs இங்கிலாந்து லயன்ஸ்

இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு டி20 போட்டிக்கான இந்திய அணியில் மயங்க் அகர்வால் இடம்பெறவில்லை. இதனால் அப்போது இந்தியத் தேர்வுக்குழுவினரைப் பலரும் விமரிசித்தார்கள். இந்தமுறை இங்கிலாந்திலும் அசத்தி வருவதால் மயங்க் அகர்வால் விரைவில் இந்திய அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.