இந்தியாவுக்கு 140 ரன்கள் வெற்றி இலக்கு

இந்தியாவுக்கு 140 ரன்கள் வெற்றி இலக்கு

இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் வங்கதேசம் 139 ரன்கள் எடுத்துள்ளது. 
Published on

இந்தியா, இலங்கை, வங்கதேசம் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, வங்கதேசம் இடையிலான ஆட்டம் கொழும்புவில் வியாழக்கிழமை பகலிரவு ஆட்டமாக நடக்கிறது.

ஏற்கனவே இலங்கையுடன் நடைபெற்ற போட்டியில் தோல்வியுற்றதால் இதில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 34, சப்பீர் அகமது 30 ரன்கள் சேர்த்தனர். இதர வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இந்திய தரப்பில் ஜெயதேவ் உனாட்கட் 3 விக்கெட்டுகளும், விஜய் சங்கர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஷர்துல் தாக்கூர், சாஹல் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com